தமிழக செய்திகள்

திருச்சி-பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம்

திருச்சி-பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி,

ஈரோடு-திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில்வே பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 25-ந் தேதி ஆகிய நாட்களில் திருச்சி-பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று மற்றும் 25-ந் தேதி மதியம் 1 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் ரெயில் ஈங்கூர் ரெயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு இந்த ரெயில் ஈங்கூரில் இருந்து பாலக்காடு டவுன் வரை முன்பதிவில்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.

மேற்கண்ட 2 நாட்களும் இந்த ரெயில் இருகூர் வந்ததும் சிங்காநல்லூர், பீளமேடு, கோவை வடக்கு. கோவை சந்திப்பு ஆகிய நிலையங்களுக்கு செல்லாது. இருகூரில் இருந்து போத்தனூர் வழியாக இயக்கப்படும். இந்த தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT