சென்னை,
சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி, தவெக அரசைக் கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கனிமொழி எம்.பி தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது கனிமொழி பேசியதாவது;
”தவெக ஆட்சியில் பெண்கள் மடியில் நெருப்பை கட்டுக்கொண்டு உள்ளனர். குழந்தகளுக்கு கூட பாதுகாப்பு தரமுடியாத ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். குற்றம் செய்ய நினைப்பவர்கள் தவெகவில் இணைகின்றனர். தவெகவிற்கு வாக்களித்த பெண்கள் வருத்தப்படுகிறார்கள். தெரியாமல் ஓட்டு போட்டுவிட்டோம், தப்பாகிவிட்டது என்று தமிழ்நாட்டு பெண்கள் நினைக்கின்றனர். தமிழ்நாட்டு பெண்கள் ஒன்றுகூடி போராடத் தொடங்கிவிட்டனர். நிச்சயம் மாற்றம் வரும். விரைவில் வரும்.”
இவ்வாறு அவர் பேசினார்.