சென்னை,
பாலக்காடு கோட்டத்தில் இம்மாதம் நடைபெற உள்ள தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மங்களூரு - சென்னை இடையே இயக்கப்படும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மங்களூரு சென்டிரலில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலுக்கு இரவு 11.45 மணிக்கு புறப்படும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22638) ஜூலை 5, 12, 19, 26 மற்றும் ஆகஸ்டு 2 ஆகிய தேதிகளில் வழியில் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.
இதேபோல், ஜூலை 7, 9, 14, 16, 21, 23, 28, 30 மற்றும் ஆகஸ்டு 4-ந் தேதிகளில் இந்த ரெயில் வழியில் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.