தமிழக செய்திகள்

ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம்,

பொம் சேலம் - திருப்பத்தூர் ரெயில்வே வழித்தடத்தில் உள்ள லோகூர் மிடி ரெயில் நிலையங்களுக்கு இடையில் இருக்கும் ஒரு வளைவில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நாளை (செவ்வாய்க்கி ழமை) ஒருநாள் மட்டும் ஈரோடு- ஜோலார்பேட்டை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஈரோட்டில் நாளை காலை 6 மணிக்கு புறப்படும் ஈரோடு - ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் (வண்டி எண்-56108) சேலம் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். ஆனால் சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு இயக்கப்படாது.

அதேபோல், மறுமார்க்கத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும் ஜோலார்பேட்டை - ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண்-56107) நாளை ஜோலார்பேட்டையில் இருந்து சேலம் வரை இயக்கப்ப டாது. அதற்கு பதில் நாளை மாலை 5.10 மணிக்கு சேலத்தில் இருந்து இந்த பயணிகள் ரெயில் புறப்பட்டு ஈரோட்டிற்கு செல்லும் என சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.