திருச்சி,
திருச்சி கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக சில ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதோடு, சில ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்விவரம் வருமாறு:-
திருச்சியில் காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி காரைக்கால் டெமு ரெயில் (எண்: 76820) நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 21-ந்தேதி வரை (19-ந்தேதி தவிர) திருவாரூர் வரை மட்டுமே இயங்கும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில் காரைக்கால் செல்லாது. மறுமார்க்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 21-ந்தேதி வரை (19-ந்தேதி தவிர) காரைக்காலில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்படவேண்டிய காரைக்கால் - திருச்சி டெமு ரெயில் (எண்: 76819) திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி வந்தடையும். அந்த நாட்களில் காரைக்காலில் இருந்து புறப்படாது. இதேபோல் திருச்சியில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும் திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (எண்:56700) நாளை முதல் வருகிற 20-ந்தேதி வரை ஆடுதுறை வரை மட்டுமே செல்லும்.
மேற்கண்ட நாட்களில் மயிலாடுதுறைக்கு செல்லாது. மயிலாடுதுறையில் இருந்து பகல் 12.35 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண்: 16847) நாளை முதல் வருகிற 20-ந்தேதி வரை மயிலாடுதுறையில் இருந்து புறப்படாது. அதற்கு பதிலாக ஆடுதுறையில் இருந்து பகல் 12.58 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு செல்லும். மேலும் நாளை முதல் வருகிற 21-ந்தேதி வரை (19-ந்தேதி தவிர) காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரெயில் (எண்: 56817) தகுந்த இடங்களில் 20 நிமிடம் நின்று தாமதமாக செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.