தமிழக செய்திகள்

செங்கோட்டை-மயிலாடுதுறை, நாகர்கோவில்-கோவை ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்

தண்டவாள சீரமைப்புப் பணிகள் காரணமாக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி,

செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் (வ.எண்.16848) இன்று முதல் 11-ந் தேதி வரை மற்றும் 13-ந் தேதி, 20, 27-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மதுரைக்கு பதிலாக மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

நாகர்கோவில்-கோவை ரெயில் (வ.எண்.16321) வருகிற 17-ந் தேதி. 22, 25, 27 மற்றும் 29-ந்தேதிகளில் விருதுநகரில் இருந்து காரைக்குடி வழியாக இயக்கப்படும். கோவை-நாகர்கோவில் ரெயில் (வ.எண்.16322) அடுத்த மாதம் 3-ந் தேதி கரூரில் இருந்து திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வந்து சேரும்.