சென்னை,
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே குறிப்பிட்ட நேரத்தில் ரெயில்வே ஊழியர்கள் பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால் சில மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு:-
* தாம்பரத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 11, மதியம் 1.30 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 11.50, மாலை 3.25 ஆகிய நேரங்களில் தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.