தமிழக செய்திகள்

சென்னை - பாலக்காடு சூப்பர்பாஸ்ட் ரெயில்களின் சேவையில் மாற்றம்!

பாலக்காடு டவுன் - பாலக்காடு சந்திப்பு இடையிலான ரெயில் சேவை அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

பாலக்காடு சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ள பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை - பாலக்காடு இடையிலான சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரெயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்டிரல் - பாலக்காடு சந்திப்பு சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22651), அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 12-ந்தேதி வரை பாலக்காடு சந்திப்பு ரெயில் நிலையத்துக்குப் பதிலாக பாலக்காடு டவுன் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இதனால், பாலக்காடு டவுன் - பாலக்காடு சந்திப்பு இடையிலான ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், பாலக்காடு சந்திப்பு - சென்னை சென்டிரல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22652), அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை பாலக்காடு சந்திப்பு ரெயில் நிலையத்துக்குப் பதிலாக பாலக்காடு டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 4.04 மணிக்குப் புறப்படும். இந்த ரெயில் பாலக்காடு சந்திப்பு - பாலக்காடு டவுன் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாலக்காடு சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடைபெறும் பொறியியல் பணிகளை முன்னிட்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT