தமிழக செய்திகள்

தாம்பரம்-திருவனந்தபுரம் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்களில் ஒன்றாக அம்ரித் பாரத் ரயில் உள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்-திருவனந்தபுரம் இடையிலான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அம்ரித் எக்ஸ்பிரஸ் ரெயில் (16121) ஆகஸ்டு 19-ந் தேதி முதல் வள்ளியூரில் இருந்து அதிகாலை 4.41 மணிக்கு பதிலாக காலை 4.30 மணிக்கு புறப்படும். அதே போல, நாகர்கோவிலில் இருந்து அதிகாலை 5.38 மணிக்கு பதிலாக காலை 5.36 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.