தமிழக செய்திகள்

பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரத்தில் மாற்றம்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635), வருகிற நவம்பர் 26-ந்தேதி 30 நிமிடங்கள் தாமதமாக மதியம் 1.45 மணிக்கு புறப்படும்.

சென்னை

பராமரிப்பு பணியை முன்னிட்டு, பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

பராமரிப்பு பணி காரணமாக, எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

* சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12605), வருகிற நவம்பர் 17-ந்தேதி 1 மணி நேரம் தாமதமாக மாலை 4.40 மணிக்கும், நவம்பர் 24-ந்தேதி 40 நிமிடங்கள் தாமதமாக 4.20 மணிக்கும் எழும்பூரில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக, காரைக்குடியில் இருந்து எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12606), நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் 35 நிமிடங்கள் தாமதமாக எழும்பூர் வந்தடையும்.

* சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635), வருகிற நவம்பர் 26-ந்தேதி 30 நிமிடங்கள் தாமதமாக மதியம் 1.45 மணிக்கும். டிசம்பர் 1-ந்தேதி 45 நிமிடங்கள் தாமதமாக மதியம் 2 மணிக்கும் எழும்பூரில் இருந்து புறப்படும்.

இதேபோன்று மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12636), நவம்பர் 17-ந்தேதி 1 மணிநேரம் 10 நிமிடங்கள் தாமதமாகவும், 24-ந்தேதி 40 நிமிடங்கள் தாமதமாகவும் எழும்பூர் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT