திருச்சி,
திருச்சி கோட்டத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக சில ரெயில்கள் பகுதியாகவும், சில ரெயில்கள் புறப்படும் இடமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்விவரம் வருமாறு:-
திருச்சியில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி காரைக் கால் டெமு ரெயில் (எண் 76820) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 7-ந்தேதி வரை (5-ந்தேதி தவிர) திருவாரூர் வரை மட்டுமே இயங்கும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில் காரைக்கால் செல்லாது. மறுமார்க்கத்தில் இன்று முதல் வருகிற 7-ந்தேதி வரை (5-ந்தேதி தவிர) காரைக்காலில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட வேண்டிய காரைக்கால் திருச்சி டெமு ரெயில் (எண் 76819) திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி வந்தடையும். அந்த நாட்களில் காரைக்காலில் இருந்து புறப்படாது.
மேலும் இன்று முதல் வருகிற 7-ந்தேதி வரை (5-ந்தேதி தவிர) காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரெயில் (எண் 56817) தகுந்த இடங்களில் 20 நிமி டம் நின்று தாமதமாக செல்லும். அதேபோல் சென்னை-குருவாயூர் ரெயில் (எண் 16127) இன்றும், வருகிற 10-ந்தேதியும் தகுந்த இடங்களில் 1 மணி நேரம் 20 நிமிடமும், வருகிற 5-ந்தேதி மற்றும் 7-ந்தேதி தகுந்த இடங்களில் 1 மணி நேரம் 50 நிமிடமும் நின்று தாமதமாக செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.