தமிழக செய்திகள்

விழுப்புரத்தில் இருந்து புறப்படும் ரெயில் சேவைகளில் மாற்றம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்,

விழுப்புரம் யார்டில் பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக மெமு ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் விபரம் பின்வருமாறு;

வருகிற 12, 13, 14, 15, 17, 18, 25 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பின்வரும் மெமு ரெயில் சேவைகள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*திருப்பதியில் இருந்து அதிகாலை 4.10 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 16111, திருப்பதி புதுச்சேரி மெமு எக்ஸ்பிரஸ், முண்டியம்பாக்கம் மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*புதுச்சேரியில் இருந்து மாலை 3.35 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 66052, புதுச்சேரி-எழும்பூர் மெமு பயணிகள் ரெயில் புதுச்சேரி மற்றும் முண்டியம்பாக்கம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* நாளை முதல் (12-ந்தேதி), 13, 14, 15, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பின்வரும் மெமு ரெயில் சேவைகள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 66046, விழுப்புரம் சென்னை கடற்கரை மெமு பயணிகள் ரெயில், விழுப்புரம் மற்றும் முண்டியம்பாக்கம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 66045, தாம்பரம் விழுப்புரம் மெமு பயணிகள் ரெயில், முண்டியம்பாக்கம் மற்றும் விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*புதுச்சேரியில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் வண்டி எண்: 16112, புதுச்சேரி திருப்பதி மெமு எக்ஸ்பிரஸ், புதுச்சேரியில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும்.