மதுரை,
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் தண்ட வாள சீரமைப்பு பணிகளுக்காக தென்மாவட்டங்களுக்கான பல ரெயில்க ளின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில், திருச்செந்தூர்-நெல்லை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56751/56754) ஆகிய ரெயில்கள் வருகிற 12, 13-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்-நெல்லை பாசஞ்சர் ரெயில், நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56003/56004) ஆகிய ரெயில்கள் வருகிற 13,14-ந் தேதி, 17-ந் தேதி, 22, 24 மற்றும் 25-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட் டுள்ளது.
ஈரோடு-செங்கோட்டை ரெயில் (வ.எண். 16845) இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை மற்றும் 12-ந் தேதிகளில் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை-ஈரோடு ரெயில் (வ.எண்.16846) இன்று, நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வரு கிற 11-ந் தேதி வரை மற்றும் 13-ந் தேதிகளில் திண்டுக்கல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
மதுரை-ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில் (வ.எண்56711) வருகிற 11-ந் தேதி, 18-ந் தேதி, 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மண்டபம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ராமேசுவரம்-மதுரை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56714) வருகிற 11, 18, 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மண் டபத்தில் இருந்து புறப்படும்.
திருச்செந்தூர்-பாலக்காடு ரெயில் (வ.எண்.16732) வருகிற 12, 13-ந் தேதி களில் நெல்லை வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16731) அன்றைய தினம் திருச் செந்தூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக நெல்லையில் இருந்து வழக் கமான நேரத்தில் புறப்படும்.
செங்கோட்டை-நெல்லை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56742) வருகிற 14, 17, 18, 24, 25-ந் தேதிகளில் சேரன்மாதேவி வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நெல்லை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56743) மேற்கண்ட நாட்களில் சேரன்மாதேவியில் இருந்து வழக்கமான நேரத்துக்கு செங்கோட்டைக்கு புறப்பட்டு செல்லும்.
செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் (வ.எண்.16848) இன்று முதல் 11-ந் தேதி வரை, 13-ந் தேதி, 20, 27-ந் தேதி வரை விருதுநகரில் இருந்து மது ரைக்கு பதிலாக மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
நாகர்கோவில்-கோவை ரெயில் (வ.எண்.16321) வருகிற 17-ந் தேதி, 22. 25, 27 மற்றும் 29-ந்தேதிகளில் விருதுநகரில் இருந்து காரைக்குடி வழி யாக இயக்கப்படும்.
கோவை-நாகர்கோவில் ரெயில் (வ.எண்.16322) அடுத்த மாதம் 3-ந் தேதி கரூரில் இருந்து திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வந்து சேரும்.