தமிழக செய்திகள்

திருச்சியில் இருந்து இயக்கப்படும் ரெயில் சேவைகளில் மாற்றம்

வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு திருச்சியில் இருந்து இயக்கப்படும் ரெயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி,

வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு திருச்சியில் இருந்து இயக்கப்படும் ரெயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வேளாங்கண்ணி திருவிழா

வேளாங்கண்ணி ஆலயத்தில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பயணிக ளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வா கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி காரைக்கால்-தஞ்சை டெமு ரெயில் (வண்டி எண் 76803) திருச்சி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் வண்டி எண் 06861 ஆக மாற்றப்பட்டு வருகிற 29, 31, செப்டம்பர் மாதம் 1 முதல் 5-ந் தேதி வரை மற்றும் 7, 8-ந் தேதிகளில் தஞ்சை யில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.10 மணிக்கு திருச்சிக்கு வந்து சேரும்.

இதேபோல் திருச்சி- வேளாங்கண்ணி டெமு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06866) வருகிற 29-ந் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை திருச்சி ஜங் ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு அதி காலை 2.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். வண்டி எண் 06865 வேளாங்கண்ணி-திருச்சி சிறப்பு ரெயில் வருகிற 29-ந் தேதி மற்றும் செப் டம்பர் 8-ந் தேதி வேளாங்கண்ணியில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.45 மணிக்கு திருச்சிக்கு வந்து சேரும்.

சிறப்பு ரெயில்

வண்டி எண் 06864 திருச்சி-வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் வருகிற 30-ந் தேதி மற்றும் செப்டம்பர் 9-ந் தேதி ஆகிய நாட்களில் திருச்சியில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.25 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். வண்டி எண் 76826 திருச்சி-காரைக்கால் டெமு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 29-ந் தேதி மற்றும் செப்டம்பர் 8-ந் தேதி திருச்சி ஜங்ஷனில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.