திருச்சி,
திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில்
திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும் திருச்சி மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56700) வருகிற 25, 27, 30 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருச்சியில் இருந்து கும்பகோணம் வரை மட்டுமே இயங்கும். இதேபோல் மயிலாடுதுறை - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16847) மேற்கண்ட தேதிகளில் மயிலாடுதுறை - கும்பகோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது கும்பகோணத்தில் இருந்து மதியம் 1.08 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
குருவாயூர்-சென்னை
செங்கோட்டை -மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16848) வருகிற 26-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலும், மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16352) வருகிற 26-ந்தேதி மற்றும் 29-ந்தேதிகளிலும், கன்னியாகுமரி-ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:12666) வருகிற 28-ந்தேதியிலும், குருவாயூர்- சென்னை எழும் பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16128) வருகிற 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையிலும், கன்னியாகுமரி- ஐதராபாத் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07229) வருகிற 27-ந்தேதியிலும் மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.