திருச்சி,
திருச்சி கோட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருச்சி வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்;
அதன்படி திருச்சி காரைக்கால் டெமு ரெயில் (76820) நாளை (புதன்கி ழமை) முதல் 31-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயங்கும்.
இதேபோல் திருச்சி - மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் (56700) மேற் கண்ட தேதிகளில் திருச்சியில் இருந்து ஆடுதுறை வரையும், காரைக்குடி-மயிலாடுதுறை பாசஞ்சர் டெமு ரெயில் (56836) வருகிற 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரையும், மயிலாடு துறை சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (16811) வருகிற 22, 24, 26, 28, 31 மற்றும் அடுத்த மாதம் ஆகஸ்டு 2 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையில் இருந்து கரூர் வரையும், கன்னியாகுமரி ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12663) வருகிற 25-ந்தேதியில் கன்னியாகுமரியில் இருந்து சந்தராகச்சி வரை மட்டுமே இயங்கும்.
காரைக்கால் திருச்சி டெமு ரெயில் (76819) நாளை (புதன்கிழமை) முதல் 31-ந்தேதி வரை காரைக்கால் வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டு செல் லும். இதேபோல், மயிலாடுதுறை செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் (16847) மேற்கண்ட தேதிகளில் ஆடுதுறையில் இருந்து நள்ளிரவு 12.58 மணிக்கும், சேலம் - மயிலாடுதுறை மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் (16812) வருகிற 22,24,26, 28, 31 மற்றும் அடுத்த மாதம் ஆகஸ்டு 2 ஆகிய தேதி களில் கரூரில் இருந்து மதியம் 3.40 மணிக்கும், ஹவுரா-திருச்சி அதிவி ரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12663) வருகிற 26-ந்தேதி சந்தராகச்சியில் இருந்து மாலை 5.41 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.