திருப்பூர்,
கரூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை எளிதாக்கும் வகையில், திருச்சி-பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி-பாலக்காடு (வண்டி எண்.168439 எக்ஸ்பிரஸ் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிக்கிழமை) ஆகிய 2 நாட்களில் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு கரூர் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தப்படும்.
பணிகள் முடிந்தவுடன் அதே நிறுத்தங்களுடன் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயிலாக பாலக்காடுக்கு இயக்கப்படும். மேற்கண்ட தகவலை, ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.