தமிழக செய்திகள்

சென்னை சென்டிரல்-ஜோலார்பேட்டை இடையிலான ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்டிரல்-ஜோலார்பேட்டை இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டிரல்-ஜோலார்பேட்டை இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண்-16089), நாளை ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16090) எல்.எச்.பி. பெட்டியாக மாற்றப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.