சேலம்,
சேலம் மாவட்டம் பூலாவரி அருகே ஆத்துக்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேச்சேரியை சேர்ந்த பற்குணன் என்பவர் விற்பனையாளராக பணி யாற்றி வருகிறார். நேற்று கடையில் மதுபிரியர்களின் கூட்டம் அதிகமாக இருந் தது. அப்போது அதேபகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் டாஸ்மாக் கடைக்கு வந்து ஒரு மதுபாட்டிலை வாங்கினார். அப்போது கடையில் இருந்த விற்பனை யாளர் பற்குணன், காலிபாட்டிலை திரும்ப பெறுவதற்கான ரூ.10-க்கான ஸ்டிக் கரை ஸ்கேன் செய்து பாட்டிலில் ஓட்டினார். ஆனால் மதுபாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.140 மட்டும் தான் தருவேன்.
கூடுதலாக ரூ.10 தர மாட்டேன் எனக்கூறி முதியவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் திடீரென தான் காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி டாஸ்மாக் கடை ஊழியர் பற்குணத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், முதியவரையும், கடை ஊழியரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
முதியவர் ஒருவர், டாஸ்மாக் கடை ஊழியரை செருப்பால் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது. இந்த மோதல் சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.