தமிழக செய்திகள்

சென்னை: அபாயகரமாக பைக் ஓட்டிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

சென்னை ராயப்பேட்டை, கதீட்ரல் சாலையில் 2 பைக்குகளில் வாலிபர்கள் 2 பேர் சாகசம் என்ற பெயரில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் சென்ற வீடியோ காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலானது.

சென்னை,

சென்னை ராயப்பேட்டை, கதீட்ரல் சாலையில் அபாயகரமாக பைக் ஓட்டிய கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள்

சென்னை ராயப்பேட்டை, கதீட்ரல் சாலையில் மெரினா கடற்கரையை நோக்கி 2 பைக்குகளில் வாலிபர்கள் 2 பேர் சாகசம் என்ற பெயரில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் சென்ற வீடியோ காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலானது. இதுதொடர்பாக மயிலாப்பூர் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கைது

இந்த நிலையில் அதிவேகமாக பைக்குகளை ஓட்டிச் சென்றதாக சென்னை ஆயிரம்விளக்கை சேர்ந்த தணிகவேல் (வயது 19) என்பவரும், பூந்தமல்லியை சேர்ந்த சந்தோஷ்(19) என்பவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள்.