சென்னை,
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது 40). இவரது மனைவி இந்துமதி (37). இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 2 வயதில் யுவராணி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
கலையரசன் தனது 2 குழந்தைகளையும் சென்னை அம்பத்தூர் அடுத்த ஓரகடம், கம்பர் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வளர்ப்பதற்காக விட்டுச் சென்றுள்ளார். அவர்களது வீட்டு அருகே உள்ள உறவினர் ஒருவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக நேற்று முன்தினம் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளனர். குழந்தை யுவராணி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. வெளியே சென்றவர்கள் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த் தனர். அப்போது குளியல் அறையில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த 3 அடி உயரமுள்ள பிளாஸ்டிக் தொட்டிக்குள் குழந்தை யுவராணி, தலைக்குப்புற விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக குழந் தையை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூச்சுத்திணறி இறந்து இருக்கலாம் என தெரிகிறது. இது பற்றி அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற
னர்.