சென்னை,
மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளியை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது சலுகை காட்டியதாக புகார் எழுந்தது. இந்தநிலையில், சென்னையில் பிரபல ரவுடியான வெள்ளைகாளிக்கு சலுகை காட்டிய ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மாரிமுத்து,
காவலர்கள் திருமுருகன், செல்லதுரை ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவிட்டார்.
காவல் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ரவுடியிடம் பணம் பெற்றது உறுதியானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் புழல் சிறைக்கு ரவுடி வெள்ளைக்காளியை அழைத்து வந்தபோது பெரம்பலூரில் வெடிகுண்டு வீசப்பட்டது. மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளியிடம் வெடிகுண்டு வீசிய கும்பலில் இருந்த கொட்டு ராஜாவை கடந்த சில மாதங்களுக்கு முன் போலீசார் என்கவுண்டர் செய்தது குறிப்பிடத்தக்கது.