தமிழக செய்திகள்

சென்னை: அரசு பேருந்துகளில் கடந்த மூன்று நாட்களில் 4.15 லட்சம் பயணிகள் பயணம்

ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில், 9,571 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

சென்னை,

ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் கடந்த மூன்று நாட்களில் 4.15 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சிறப்புப் பேருந்துகள்

இது தொடர்பாக,ம் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

2026-ஆம் ஆண்டு ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் பின்வரும் ஐந்து இடங்களில் அமைந்துள்ள பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன:

1. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம்.

2. புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு.

3. மாதவரம் புதிய பேருந்து நிலையம்.

4. CMDA காலநிலைப் பூங்கா தற்காலிகப் பேருந்து நிலையம்.

5. மறைமலைநகர் தற்காலிகப் பேருந்து நிலையம்.

4.15 லட்சம் பயணிகள் பயணம்

15.10.2026 முதல் 17.10.2026 (இரவு 12.00 மணி வரை) ஆகிய மூன்று நாட்களில், சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் தினசரிப் பேருந்துகள் 6,573 உடன், 2,998 சிறப்புப் பேருந்துகள் (அரசு போக்குவரத்துக் கழகச் சிறப்புப் பேருந்துகள் 2,528, தனியார் பேருந்துகள் 470) என மொத்தம் 9,571 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

நாள்வாரியாக, 15.10.2026 அன்று 2,191 வழக்கமான பேருந்துகள் மற்றும் 355 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 2,546 பேருந்துகள் இயக்கப்பட்டு 1.15 லட்சம் பயணிகளும், 16.10.2026 அன்று இரவு 12.00 மணி நிலவரப்படி 2,191 வழக்கமான பேருந்துகள் மற்றும் 1,155 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 3,346 பேருந்துகள் இயக்கப்பட்டு 1.47 லட்சம் பயணிகளும், 17.10.2026 அன்று இரவு 12.00 மணி நிலவரப்படி 2,191 வழக்கமான பேருந்துகள் மற்றும் 1,488 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 3,679 பேருந்துகள் இயக்கப்பட்டு 1.53 லட்சம் பயணிகளும் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு, மூன்று நாட்களில் மொத்தம் 4.15 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT