சென்னை,
தீபாவளி நாளான இன்று சென்னை விமான நிலையம் வெறிச்சோடியது. போதிய பயணிகள் இல்லாததால் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை தனது சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களாகவே மக்கள் படையெடுத்துனர். கடந்த இரு நாட்களாக சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்கள் மற்றும் கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பஸ் நிலையங்களில், பயணிகள் கூட்டம் அலை மோதியது. சென்னையில் இருந்து வெளியூர் சென்ற பயணிகளின் எண்ணிக்கை சுமார் 17 லட்சம் என கூறப்படுகிறது.
இந்தநிலையில், பண்டிகை காலங்களில் விமான நிலையங்களில் கூட்டம் அலைமோதும் நிலையில், தீபாவளி நாளில் இன்று(நவ.8) சென்னை விமான நிலையம் வழக்கத்திற்கு மாறாகப் பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
சென்னையில் இருந்து டெல்லி புறப்படவிருந்த இண்டிகோ விமானம் ஆகிய இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. டெல்லியில் இருந்து சென்னை வரும் விமானமும், டெல்லிக்கு புறப்படும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பெரும்பாலான பயணிகள் ஏற்கனவே தங்களின் பயணங்களை முடித்துவிட்ட நிலையில், போதிய முன்பதிவு இல்லாததால் இந்த முடிவை இண்டிகோ நிறுவனம் எடுத்துள்ளது.