தாம்பரம்,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் பணிமனையில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 11.40 மணி முதல் மதியம் 2.40 மணி வரை மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, செங்கல்பட்டில் இருந்து இன்று காலை 11.50 மணி, மதியம் 1.05 மற்றும் 2.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் பகுதி நேரமாக செங்கல்பட்டு-காட்டாங்கொளத்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
அதே போல், செங்கல்பட்டில் இருந்து இன்று மதியம் 12.30 மணி மற்றும் மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் பகுதி நேரமாக செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.13, 11.28, 12.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் பகுதி நேரமாக காட்டாங்கொளத்தூர்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே போல், சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.48, 12.02 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் பகுதி நேரமாக கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.