சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
”எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள சிங்கபெருமாள்கோவில் பணிமனையில் இன்று (வியாழக்கிழமை) காலை 11.40 மணி முதல் மதியம் 2.40 மணி வரையில் (3 மணி நேரம்) பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* செங்கல்பட்டில் இருந்து காலை 11.50, மதியம் 1.05, 2.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-காட்டாங்கொளத்தூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
* செங்கல்பட்டில் இருந்து மதியம் 12.30, 1.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற் கரை வரும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே பகுதி நேர ரத்து செய் யப்படுகிறது.
* சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.13, 11.28, மதியம் 12.30 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் காட்டாங்கொளத்தூர்-செங்கல்பட்டு இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.48, மதியம் 12.02 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.