சென்னை,
புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்து சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து முறையாக உள்ளது. குறிப்பாக, சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அலுவலகம் செல்வோர், மாணவ - மாணவியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் ரெயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தாம்பரம் - சென்னை கடற்கரை மின்சார ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால், அலுவலகம் செல்வோர், பள்ளி,கல்லூரி செல்வோர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தண்டவாள விரிசலை சரிசெய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.