சென்னை,
சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் மீஞ்சூர்-பொன்னேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே வருகிற 10, 12 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணி முதல் அதிகாலை 4.45 மணி வரையில் (5 மணி நேரம்) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
* சென்டிரலில் இருந்து வருகிற 10, 12 ஆகிய தேதிகளில் இரவு 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் மீஞ்சூர்-கும்மிடிப் பூண்டி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
* கும்மிடிப்பூண்டியில் இருந்து வருகிற 11, 13 ஆகிய தேதிகளில் அதி காலை 3.50 மணிக்கு சென்டிரல் வரும் மின்சாரரெயில் கும்மிடிப்பூண்டி-மீஞ்சூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.