தமிழக செய்திகள்

சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை பயணிகள் ரெயில் ரத்து

மின்சார ரெயில்கள் சூலூர்பேட்டை-எளாவூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை,

சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள சூலூர்பேட்டை-தடா ரெயில் நிலையம் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.10 மணி முதல் மாலை 3.10 மணி வரையில் (6 மணி நேரம்) பராமரிப்பு பணி நடை பெற இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

* சென்டிரலில் இருந்து காலை 5.40 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் (வண்டி எண்.66029), சூலூர்பேட்டையில் இருந்து காலை 7.50 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும் (66035), நெல்லூ ரில் இருந்து காலை 10.20 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் (66036). சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35 மணிக்கு சென்டிரல் வரும் பயணிகள் ரெயிலும் (66060), ஆவடியில் இருந்து காலை 4.25 மணிக்கு சென்டிரல் செல்லும் பயணிகள் ரெயிலும் (66000) இன்று ரத்து செய்யப்படுகிறது.

* சென்டிரலில் இருந்து இன்று காலை 7.30, 8.35, 10.15 ஆகிய நேரங்களில் சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் எளாவூர்-சூலூர்பேட்டை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. சூலூர்பேட்டையில் இருந்து இன்று காலை 10, 11.45, மதியம் 1.15 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் மின்சார ரெயில்கள் சூலூர்பேட்டை-எளாவூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.