சென்னை,
தீபாவளி பண்டிகையின் போது உருவாகும் பட்டாசு கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து, பட்டாசு வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
பொதுமக்கள் பட்டாசு கழிவுகளை இதர வீட்டு கழிவுகளுடன் கலக்காமல் தனியாக சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இயந்திரங்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை கொண்டு சாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.
பொதுமக்கள் குறைந்த ஒளி எழுப்பும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் காலை 6 முதல் 7 மணி வரையும் மாலை 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.