சென்னை,
சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டம் ஒவ்வொரு மாதமும் இறுதியில் நடை பெறும். இதில் மக்களின் கோரிக்கை, பிரச்சினை உள்ளிட்டவவை குறித்து விவாதித்து தீர்வு காணப்படும். இதேபோல, பல்வேறு திட்டபணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, தீர்மானமும் நிறைவேற்றப்படும்.
முன்னதாக மாத தொடக்கத்தில் வார்டு வாரியாக வார்டு குழு கூட்டம் நடைபெற்று, அதில் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக் கப்படும். இந்த வார்டு குழுவில் விவாதிக்கப்படும் பிரச்சினைகள் குறித்து மன்றக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும். இந்தநிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் நடைபெற்றது. அதன்பின், சட்டமன்ற தேர்தல் பணிகளால், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப் பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக மாநகராட்சி மன்றக் கூட்டம் நடை பெறவில்லை.
இந்த மாதம் 7-ந்தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டது. அதன்பின்னர், வார்டு கமிட்டி கூட்டம் நடைபெறும் என ஒவ்வொரு கவுன்சிலர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கான அறி விப்புகள் முறையாக வழங்கப்படாததால் வார்டு கமிட்டி கூட்டம் நடைபெற வில்லை. இதேபோல, மாதம்தோறும் நடைபெறும் மாநகராட்சி மன்றக்கூட்ட மும் இம்மாதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.