தமிழக செய்திகள்

ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி பகுதியில் விதிகளை மீறிய 105 வீடுகளுக்கு நோட்டீஸ்: சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை மாநகராட்சி 15-வது மண்டலத்துக்கு உட்பட்ட நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி பகுதிகளில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள வீடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி பகுதியில் விதிகளை மீறிய 24 வீடுகளுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், 2-ம் கட்டமாக 105 வீடுகளுக்கு நேற்று சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 798 வீடுகள்

சென்னை மாநகராட்சி 15-வது மண்டலத்துக்கு உட்பட்ட நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி பகுதிகளில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள வீடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடற்கரையோரம் குறிப்பிட்ட அளவுக்கு கட்டிடங்கள் அமைக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, 192, 194, 197 ஆகிய வார்டுகளில் மாநகராட்சி நடத்திய கணக்கெடுப்பில் 798 வீடுகள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

105 வீடுகளுக்கு நோட்டீஸ்

இதுதொடர்பான விவரங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு அனுப்பப்பட்டன. இதையடுத்து. 440 வீடுகளின் உரிமையாளர்கள் மேல் முறையீடு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்டு மாதம் 24 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், 2-ம் கட்டமாக 105 வீடுகளுக்கு நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கூடுதலாக கட்டப்பட்ட கட்டிடங்கள் மீதும் நடவடிக்கை

மண்டல உதவி கமிஷனர் லோகேஸ்வரன் தலைமையில் செயற்பொறியாளர் மனோகரன் மற்றும் உதவி பொறியாளர்கள் நோட்டீஸ் வழங்கினர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கட்டப்பட்ட கட்டிடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT