சென்னை,
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் திருமல்லையா. இவரது மனைவி கோட்டீஸ்வரி (வயது 39). இவர் தொழில் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம் தேதி கோட்டீஸ்வரி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார்.
அப்போது மாதவரம் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் கீழே விழுந்த கோட்டீஸ்வரி மீது லாரி ஏறி இறங்கியதில் அவர் பரிதாபமாக இறந்தார். அவரது குடும்பத்தினர் சார்பில் இந்த விபத்தில் ரூ.99 லட்சம் இழப்பீடு கோரி சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பில், விபத்தில் பலியான கோட்டீஸ்வரியின் குடும்பத்துக்கு தனியார் காப்பீடு நிறுவனம் ரூ.73 லட்சத்து 62 ஆயிரத்து 800 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.