தமிழக செய்திகள்

திமுக கூட்டணிக்கு சென்னை கோட்டை - கி.வீரமணி

1971-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக 184 இடங்களில் வெற்றி பெற்றது.

சென்னை,

பிட்டி தியாகராயரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தவந்த திராவிடக்கழகத் தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கி.வீரமணியிடம் நடந்து முடிந்த தேர்தலில் த.வெ.க-வின் வருகையால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இருக்காது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழகத்தில் 1971-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக 184 இடங்களில் வெற்றி பெற்றது. அப்ப்டி ஒரு வெற்றியை எந்த கட்சியும் இதுவரை பெறவில்லை. திமுக ஆட்சிக்கு வராது என ஆரூடம் கணித்தவர்கள் எல்லாம், அடையாளம் தெரியாமல் துண்டைக் காணோம்.. துணியைக் காணோம் என ஓடிவிட்டார்கள்.

அதே நிலைமை மீண்டும் மே 4-ஆம் தேதிக்குப் பின் வரும். “திமுக கூட்டணிக்கு சென்னை கோட்டை. மற்ற அணிகளுக்கு மனக் கோட்டை”

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

SCROLL FOR NEXT