தமிழக செய்திகள்

சென்னையில் 16 தொகுதிகளுக்கு கூடுதலாக 5,554 ஓட்டுப்பதிவு எந்திரங்கள்

இந்தமுறை வேட்பாளரின் புகைப்படம், ஓட்டு பதிவு செய்யும் எந்திரத்தில் ஒட்டப்படுவதால் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை எளிதாக உறுதி செய்ய முடியும்.

சென்னை,

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 419 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதனால் வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்கள் கூடுதலாக தேவைப்பட்டது. கூடுதல் எந்திரங்களை கணினி மூலம் தேர்வு செய்யும் பணி நேற்று மாலை நடைபெற்றது.

அரசியல் கட்சி பிரதி நிதிகள் முன்னிலையில் தேர்தல் அதிகாரி குமர குருபரன் ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களை சுழற்சி முறையில் தேர்வு செய்தார்.

5,554 வாக்குப்பதிவு எந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர். கே.நகர், பெரம்பூர், கொளத் தூர் ஆகிய 3 தொகுதிகளிலும் 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சைதாப்பேட்டை தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்கு மட்டும் ஒரு மின்னணு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. மற்ற 12 தொகுதி களில் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

ஏற்கனவே 4,889 வாக்குப்பதிவு எந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கூடுதலாக 5,554 எந்திரங்கள் என மொத்தம் 10,443 ஓட்டுப் பதிவு எந்திரங்கள் இந்த தேர்தலில் பயன்படுத்தப்படுகிறது. இதில் 20 சதவீதம் எந்திரங்கள் கையிருப்பில் வைக்கப்படும்.

ஆர்.கே.நகர். தொகுதிக்கு 886, பெரம்பூர் தொகுதிக்கு 1071, கொளத்தூர் தொகு திக்கு 1029, ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. வில்லிவாக்கம் -612, திரு.வி.க. நகர்-538, எழும்பூர்-480, ராயபுரம்-464, துறைமுகம் - 460, சேப்பாக்கம், திருவல்லிக் கேணி-564, ஆயிரம் விளக்கு - 592, அண்ணா நகர் - 654.விருகம்பாக் கம்-746, சைதாப் பேட்டை-338, தி.நகர் - 602. மயிலாப்பூர்- 653, வேளச்சேரி 754 வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளது.

வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் வி.வி.பேட் எந்திரங்கள் இன்று மாலையில் இருந்து தொகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. அவை பாதுகாப்பான அறையில் வைக்கப்படுகிறது. வாக்குப்பதிவு எந்தி ரத்தில் ஒட்டப்பட வேண்டிய வேட்பாளரின் பெயர், சின்னம், வண்ண புகைப் படத்துடன் கூடிய பேலட் பேப்பர் அச்சடிக்கப்படுகிறது. அவை வாக்குப்பதிவு எந்திரத்தில் திங்கட்கிழமை முதல் பொருத்தப்படுகிறது.

இந்தமுறை வேட்பாளரின் புகைப்படம், ஓட்டு பதிவு செய்யும் எந்திரத்தில் ஒட்டப்படுவதால் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை எளிதாக உறுதி செய்ய முடியும்.