தமிழக செய்திகள்

சென்னையில் கனமழை: அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்தது.

சென்னை,

சென்னையில் பெய்துவரும் கனமழை தொடர்பாக அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வட தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, கேரளா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் கனமழை

இதனிடையே, சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது. இரவு விடிய விடிய கனமழை பெய்த நிலையில் நகரின் பல பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு

இந்நிலையில், சென்னையில் கனமழை பெய்த நிலையில் அமச்சர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னையில் 15 மண்டலங்களுகான பொறுப்பு அமைச்சர்களாக 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பொறுப்பு அமைச்சர்கள் உடனடியாக சென்னை திரும்ப முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மீட்பு பணிகளை விரைவுபடுத்த அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT