சென்னை,
சென்னையில் கிணற்றின் தொட்டிக்குள் இறங்கியபோது மயங்கி விழுந்து இறந்த 2 தொழிலாளிகளின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சத்துக்கான காசோலையை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா வழங்கினார்.
சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், தென்றல்நகர் 3-வது தெருவில் நேற்று (12.10.2026) மழைநீர் தேங்கும் கிணற்றுக்குள் மோட்டார் பழுது பார்க்கும் பணி மேற்கொள்ள தொட்டிக்குள் இறங்கிய பொழுது மயங்கி விழுந்து நவீன்குமார், அஸ்மத்பாஷா ஆகிய 2 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.
கிணற்றுக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்த 2 தொழிலாளிகளின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவுப்படி, நிவாரணத் தொகையாக, தலா ரூ.30 லட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா இன்று (13.10.2026) வழங்கினார். அப்போது தண்டையார்பேட்டை மண்டல அலுவலர் ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.