தமிழக செய்திகள்

திருப்பத்துார்: சரக்கு ரெயில் தானாக ஓடி தடம் புரண்டது எப்படி? - விசாரிக்க உத்தரவு

சரக்கு ரெயில் தடம் புரண்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

சென்னை,

ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

தானாக ஓடிய சரக்கு ரெயில்

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார் பேட்டை ரெயில்வே ஸ்டேஷனில் உள்ள யார்டில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, எட்டு பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி அளவில் திடீரென தானாக பின்னோக்கி ஓடி, ஜோலார்பேட்டை -சோமநாயக்கன்பட்டி இடையே தாமலேரி முத்துார் வரை சென்று நின்றது.

விபத்து தவிர்ப்பு

இதில், ஏழு ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதில், இரண்டு பெட்டிகள் மெயின் லைனில் சென்றது. இவற்றை ரெயில்வே கேட் கீப்பர் பார்த்து, ஜோலார்பேட்டை ஸ்டேஷனுற்கு தெரிவித்தார். இதையடுத்து, ரெயில்வே ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, அவ்வழியாக வந்த ரெயில்களை ஆங்காங்கே நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விசாரிக்க உத்தரவு

இதன் பின்னர் ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு மற்றும் மீட்பு பணி குழுவினர், ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை, தடம் புரண்ட சரக்கு ரெயில் பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டன. சென்னை கோட்ட மேலாளர் ஷாலியேந்திர சிங், நள்ளிரவில் அங்கு ஆய்வு நடத்தி, இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT