தமிழக செய்திகள்

சென்னை: அம்மா உணவகத்தில் அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு

பொதுமக்களிடம் அமைச்சர் நேரடியாக கலந்துரையாடி, உணவின் தரம் மற்றும் சேவை குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார்.

சென்னை,

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், பெருநகர சென்னை மாநகராட்சி, எண்.101, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-28 இல் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு

ஆய்வின்போது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சுவை, சுகாதாரம், சமையலறை பராமரிப்பு, குடிநீர் வசதி மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

அறிவுறுத்தல்

மேலும், உணவகம் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும், தரமான மற்றும் சுவையான உணவுகளை குறித்த நேரத்தில் வழங்க வேண்டும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, உணவகத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடம் அமைச்சர் நேரடியாகக் கலந்துரையாடி, உணவின் தரம் மற்றும் சேவை குறித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார்.