தமிழக செய்திகள்

சென்னையில் மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்: தமிழக அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

இந்த சம்பவம் குறித்து 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை வேளச்சேரி பஸ் நிலையம் அருகே மேம்பாலத்தின் கீழ் உள்ள மாநகராட்சி பூங்காவில், மனநலம் பாதிக்கப்பட்ட 61 வயது மூதாட்டி ஒருவர் படுகாயங்களுடன் இருந்தார். தகவல் அறிந்து ரோந்து பணியில் இருந்த வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடுமையான ரத்த காயங்களுடன் இருந்த அந்த மூதாட்டியை உடனடியாக மீட்டனர்.

பாலியல் பலாத்காரம்

பாதிக்கப்பட்ட மூதாட்டி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவரால் நடந்த சம்பவங்களை சரியாக சொல்ல முடியவில்லை. இதனால் போலீசார் அவரை அரிகில் உள்ள மருத்துவமணைக்கு அழைத்து சென்றனார். அங்கு அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

2 பேர் கைது

இதுபற்றி வழக்குப்பதிவு செய்த வேளச்சேரி போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் பீகாரை சேர்ந்த ஓட்டல் தொழிலாளர்கள் முகமது மஹலாப் (வயது 30), முகமது ஆதில் (28) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் சென்னை வேளச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகளிர் ஆணையம்

இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், இந்த சம்பவம் குறித்து 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நடவடிக்கை

சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பு, விசாரணை முன்னேற்றம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து முழுமையான விளக்கம் வழங்குமாறு நோட்டீசில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் 61 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.