தமிழக செய்திகள்

நேபாள வெள்ளத்தில் பலியானவர்களுக்கு சென்னை பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

சென்னை,

நேபாள வெள்ளத்தில் சிக்கி பலியானர்களுக்கு சென்னை பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

நேபாளத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 469 பேர் பலியானார்கள். 977 பேரை இன்னும் காணவில்லை. 21 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 82 தமிழர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் இன்று நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி மௌன அஞ்சலியும் செலுத்தினர்.