சென்னை, சென்னை ராஜீவ்காந்தி சாலையில் மெட்ரோ மற்றும் கழிவுநீர் குழாய் பணிகள் நடைபெறுவதால், வரும் 5-ந்தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் ஏற்கனவே நடந்து வருகிறது. இந்த நிலையில் அதே பகுதியில் கழிவுநீர் குழாய்கள் சீரமைப்பு பணிகளும் நடைபெற உள்ளன.
இதையொட்டி அந்தப் பகுதியில் வரும் 5-ந்தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு வாகன ஓட்டிகளை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தப் போக்குவரத்து மாற்றத்தில் கிண்டியில் இருந்து வரும் மாநகர பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மத்திய கைலாஸ் சந்திப்பில் ராஜீவ்காந்தி சாலை நோக்கி வலது புறம் செல்ல அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளனர்.
ஆனால் அதே கிண்டியில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள் மத்திய கைலாஸ் சந்திப்பில் ராஜீவ்காந்தி சாலையில் வலது புறம் திரும்ப அனுமதிக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.