தமிழக செய்திகள்

சென்னை: 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தாய், மகன் கைது

அனைத்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிகளுக்கு அண்ணன் முறை கொண்ட வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது.

அம்பத்தூர்

சென்னையில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தாய், மகன் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அம்பத்தூரில் வசிக்கும் 43 வயது பெண், முதல் கணவரை பிரிந்து 2-வதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். முதல் கணவருக்கு பிறந்த 24 வயது மகனும், 2-வது கணவருக்கு பிறந்த 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர்.

பாலியல் தொல்லை

இதற்கிடையில் 2-வது கணவர் இறந்த நிலையில், அந்த பெண் 3-வதாக மற்றொருவருடன் வசித்து வருகிறார். 2-வது கணவருக்கு பிறந்த 2 மகள்களும் திருவள்ளூரில் விடுதியில் தங்கி 11, 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். விடுமுறையில் வீட்டுக்கு சென்ற தங்களுக்கு தாயின் 24 வயது மகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக சக மாணவிகளிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிகளுக்கு அண்ணன் முறை கொண்ட வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்ததும், இதனை அவர்களது தாய் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தாய்-மகன் இருவரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT