சென்னை,
சென்னையில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்வதாக இருந்தது. வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், தியாகராயநகர் ஆகிய தொகுதியில் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் அனுமதி கோரி விண்ணப்பித்து இருந்தனர்.
விஜய் பிரசாரத்திற்கு நேற்று இரவு போலீசார் அனுமதி வழங்கினர். இதில் வில்லிவாக்கம் தொகுதியில் பகல் 12 மணி முதல் மதியம் 1 மணிக்குள் பிரசாரம் செய்து முடிக்கவும், தியாகராயநகர் தொகுதியில் மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் பிரசாரம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அனுமதிக்கப்பட்ட நேரத்தில் விஜய் பிரசாரம் செய்து முடிக்க போதுமானதாக இருக்காது என்பதால் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
நாளை சைதாப்பேட்டையில் விஜயின் பிரசாரம் நடைபெறுவதாக இருந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு மணிநேரம் மட்டுமே பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி கொடுத்திருந்தது. தவெக கட்சி சார்பிலேயே பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 17 நாட்கள் உள்ள நிலையில் விஜய் சென்னை மற்றும் திருச்சியில் மட்டுமே பிரசாரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.