சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் பிரியா (வயது 42). இவரிடம் பள்ளித் தோழரான தண்டையார்பேட்டை முத்தமிழ்நகரைச் சேர்ந்த அசோக்குமார்(37) என்பவர் ஆன்லைன் தொழிலை விரிவுபடுத்துவதாக கூறி சிறுக சிறுக ரூ.18 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து பிரியா அளித்த புகாரின் பேரில் தண்டையார்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.