தமிழக செய்திகள்

சென்னை - திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் டிசம்பர் 9 முதல் 27 வரை ரத்து!

ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் தண்டவாள மறுசீரமைப்பு மற்றும் மின்னணு இன்டர்லாக்கிங் பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை - திருப்பதி இடையிலான சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் டிசம்பர் 9 முதல் 27-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்படும் ரெயில்களின் விவரம்

  • ரெயில் எண் 16057: சென்னை சென்ட்ரல் - திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ். சென்னையில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் இந்த ரெயில், டிசம்பர் 9 முதல் 27 வரை ரத்து செய்யப்படுகிறது.

  • ரெயில் எண் 16054: திருப்பதி - சென்னை சென்ட்ரல் சப்தகிரி எக்ஸ்பிரஸ். திருப்பதியில் இருந்து காலை 10.10 மணிக்குப் புறப்படும் இந்த ரெயில், டிசம்பர் 9 முதல் 27 வரை ரத்து செய்யப்படுகிறது.

  • ரெயில் எண் 16053: சென்னை சென்ட்ரல் - திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ். சென்னையில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்படும் இந்த ரெயில், டிசம்பர் 9 முதல் 27 வரை ரத்து செய்யப்படுகிறது.

  • ரெயில் எண் 16058: திருப்பதி - சென்னை சென்ட்ரல் சப்தகிரி எக்ஸ்பிரஸ். திருப்பதியில் இருந்து மாலை 6.05 மணிக்குப் புறப்படும் இந்த ரெயில், டிசம்பர் 9 முதல் 27 வரை ரத்து செய்யப்படுகிறது.

ரெயில் பயணிகள் கவனத்திற்கு!

குண்டக்கல் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் நடைபெறும் மின்னணு இன்டர்லாக்கிங் பணிகள் பணிகள் காரணமாக இந்த ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, டிசம்பர் மாதத்தில் சென்னை - திருப்பதி இடையே பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள், மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SCROLL FOR NEXT