தமிழக செய்திகள்

நாமக்கல்லில்பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான போட்டிகள் நேற்று தொடங்கியது. பள்ளி அளவில் நடத்தப்பட்ட இந்த பேட்டிகள் 14 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டோர், 19 வயதுக்குட்பட்டோர் என 3 பிரிவுகளில் நடத்தப்பட்டன.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கார்த்திகேயன் பார்வையிட்டார். ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 பேர் தேர்வு செய்யப்பட்டு வட்ட அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT