தமிழக செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் ராட்சத பலூன் - கலெக்டர் பறக்கவிட்டார்

மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி ராட்சத பலூனை கலெக்டர் பறக்கவிட்டார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டிஅதனை பிரபலப்படுத்தும் வகையில் சென்னை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் அமிர்தஜோதி, ராட்சத பலூனை பறக்கவிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கியூரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அதிகாரி இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT