தமிழக செய்திகள்

சிவகங்கையில் சதுரங்க போட்டி

சிவகங்கையில் சதுரங்க போட்டி நடைபெற்றது

சிவகங்கை

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் தலைமையிலும் மாவட்ட உடற்கல்வி ஆய்வர் வளர்மதி முன்னிலையிலும் நடைபெற்றது.

இப்போட்டியில் 8 குறுவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அனைத்து பிரிவை சேர்ந்த 192 மாணவ- மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறுவார்கள்.