தமிழக செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.10 உயர்வு

முட்டை கொள்முதல் விலை 435 காசுகளாக நீடித்து வருகிறது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.62-க்கு விற்பனை செய் யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கி ணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 உயர்த்த முடிவு செய்தனர்.

எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.72 ஆக அதிக ரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 435 காசுகளாகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.133 ஆகவும் நீடித்து வருகிறது. அவற்றின் விலை களில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT